சென்னை : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “மத்தியமேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. ஆந்திரா, அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. வடக்கு ஆந்திரா, அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு! பகுதி, அடுத்த 2 தினங்களில் வடக்கு வடமேற்கு திசையை நோக்கி நகர கூடும்.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் காரணமாக இன்று கடலோர ஆந்திர மாவட்டங்களில் மிக கனமழையும், அடுத்து வரும் நாட்களில் ஒடிசாவில் மிக கனமழையும் பெய்யக்கூடும். தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 2 நாட்களுக்கு நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
The post வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! appeared first on Dinakaran.