×

பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துகள். தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்.

The post பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Mariyappan Thangavelu ,Paralympics ,Chennai ,Tamil Nadu ,M.K.Stalin ,M.K. Stalin ,
× RELATED பூசணிக்காயை கட்டுச்சோற்றில் மறைக்க...