ஐதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்ததால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஏராளமான மக்கள் தண்ணீரில் தவித்து வருகிறார்கள். குறிப்பாக விஜயநகரம் ஏரி போல் காட்சி அளிக்கிறது. இந்த கனமழையின் காரணமாக சுமார் 6000 பேர் மீட்கப்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அந்தப் பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில் தற்போது கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நிதி உதவி வழங்கியுள்ளார். அவர் சுமார் ஒரு கோடி ரூபாயை நிவாரண பணிகளுக்காக கொடுத்துள்ளார். இரு மாநிலங்களுக்கும் தலா 50 லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாய் ஜூனியர் என்டிஆர் கொடுத்துள்ளார்.
The post ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு ஜூனியர் என்டிஆர் ரூ.1 கோடி நிதி appeared first on Dinakaran.