×

ஆந்திராவில் பரபரப்பு சமையல் காஸ் சிலிண்டர் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து

*டிரைவர், கிளீனர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

திருமலை : ஆந்திராவில் சமையல் காஸ் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர், கிளீனர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூரில் இருந்து லக்கிரெட்டிப்பள்ளிக்கு எச்.பி. நிறுவனத்தின் சமையல் காஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று காலை சென்றது. கடப்பா மாவட்டம், வேம்பள்ளி அருகே உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிரைவர், கிளீனர் லேசான காயத்துடன் தப்பினர். சமையல் காஸ் சிலிண்டர் லாரி கவிழ்ந்ததால் அப்பகுதி மக்கள் கடும் பீதியடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள், வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த வேம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வேறொரு லாரியில் காஸ் சிலிண்டர்களை ஏற்றி அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆந்திராவில் பரபரப்பு சமையல் காஸ் சிலிண்டர் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Andhra ,Andhra Pradesh ,Anantapur ,Lakretipalli ,
× RELATED ஆந்திராவில் பயங்கரம் வீட்டுக்கு வந்த...