×
Saravana Stores

‘புல்டோசர் கொள்கை’ குறித்து உச்ச நீதிமன்றத்தின் கருத்து வரவேற்கத்தக்கது: ராகுல் காந்தி

டெல்லி: ‘புல்டோசர் கொள்கை’ குறித்து உச்ச நீதிமன்றத்தின் கருத்து வரவேற்கத்தக்கது என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புல்டோசர் நடவடிக்கைக்கு எதிரான வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்; குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டால் உடனே புல்டோசர் மூலம் குற்றம்சாட்டப்பட்டவரின் வீடுகளை இடிப்பீர்களா?. அவ்வாறு கண்டிப்பாக செய்ய முடியாது. அது சட்டப்படி குற்றமாகும் என்று கூறினார்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்தை வரவேற்பதாக காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; பா.ஜ.க.வின், அரசியல் சாசனத்துக்கு விரோதமான, நியாயமற்ற ‘புல்டோசர் கொள்கை’ குறித்து உச்ச நீதிமன்றத்தின் கருத்து வரவேற்கத்தக்கது. மனிதநேயத்தையும் நீதியையும் புல்டோசரின் கீழ் நசுக்கும் பா.ஜ.க.வின் அரசியல் சாசனத்திற்கு எதிரான முகம், தற்போது நாட்டின் முன் அம்பலமாகியுள்ளது. கட்டுக்கடங்காத அதிகாரத்தின் அடையாளமாக மாறிய புல்டோசர், குடிமக்களின் உரிமைகளை காலில் போட்டு மிதித்து, ஆணவத்துடன், தொடர்ந்து சட்டத்திற்கு சவால் விடுத்து வருகிறது.

‘விரைவான நீதி’ என்ற போர்வையில், சாதாரண குடிமக்கள் மற்றும் ஏழைகளின் வீடுகள் ‘பயத்தின் ஆட்சியை’ நிறுவும் நோக்கத்துடன் நடத்தப்படும் புல்டோசர்களின் சக்கரங்களுக்குள் அடிக்கடி வருகின்றன. மிகவும் உணர்ச்சிகரமான இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடும் என்றும், பாஜக அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோத செயல்பாடுகளிலிருந்து குடிமக்களைப் பாதுகாக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். பாபா சாகேப்பின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாடு இயங்கும், அதிகாரத்தின் சாட்டையால் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ‘புல்டோசர் கொள்கை’ குறித்து உச்ச நீதிமன்றத்தின் கருத்து வரவேற்கத்தக்கது: ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Rahul Gandhi ,Delhi ,Justice ,Kawai ,
× RELATED நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ய...