×

அதிபர் நிகோலஸ் மதுரோவின் தனி விமானத்தை பறிமுதல் செய்த அமெரிக்காவின் நடவடிக்கைக்கு வெனிசுலா அரசு கடும் கண்டனம்

வெனிசுலா: வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவின் தனி விமானத்தை அமெரிக்கா பறிமுதல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட டஸால்ட் பால்கன் 900 இஎக்ஸ் வகை தனி விமானத்தை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ பயன்படுத்தி வருகிறார். அமெரிக்க அதிபரின் தனி விமானத்தை விட இதில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக டொமினிக்கன் குடியரசில் நிறுத்தப்பட்டிருந்த மதுரோ வின் தனி விமானத்தை அமெரிக்க அதிகாரிகள் பறிமுதல் செய்து பிளோரிடாவுக்கு கொண்டு சென்றுள்ளனர். அமெரிக்காவில் இருந்து கரீபியன் நாட்டை சேர்ந்த போலீஸெல் மூலம் சட்டவிரோதமாக விமானம் வாங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டங்களை மீறியதால் விமானத்தை பறிமுதல் செய்ததாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. அதிபர் நிகோலஸ் மதுரோவின் விமானம் பறிமுதல் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வெனிசுலா அரசு அமெரிக்காவின் ஜப்தி நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

The post அதிபர் நிகோலஸ் மதுரோவின் தனி விமானத்தை பறிமுதல் செய்த அமெரிக்காவின் நடவடிக்கைக்கு வெனிசுலா அரசு கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Venezuelan Government ,United States ,President Nicolas Maduro ,Venezuela ,President ,Nicolas Maduro ,U.S. ,US ,Dinakaran ,
× RELATED வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு!