×

விண்வெளிக்கு சுற்றுலா சென்ற குழு திரும்பியது

வாஷிங்டன்: அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் விண்வெளி சுற்றுலாவிற்கு சென்ற முதல் குழு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது. இந்த விண்வெளி சுற்றுலா பயணம் கடந்த 11ம் தேதி தொடங்கியது. ஐசக்மேன், ஸ்கார் போடீட், ஷாரா கில்லீஸ், அன்னா மேனன் ஆகியோர் விண்வெளிக்குச் சென்றனர்.

இவர்கள், வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்றபின் கடந்த 12ம் தேதி ஐசக்மேன் முதல் நபராக விண்ணில் நடந்தார். இதன்மூலம் ஸ்பேஸ் வாக் சென்ற முதல் மனிதர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்நிலையில் 5 நாட்களாக நீடித்த விண்வெளி சுற்றுலா பயணம் முடிந்து 4 பேரும் வெற்றிகரமாக நேற்று பூமிக்கு திரும்பினர்.

 

The post விண்வெளிக்கு சுற்றுலா சென்ற குழு திரும்பியது appeared first on Dinakaran.

Tags : Washington ,Space X ,Elon Musk ,Earth ,ISACKMAN ,SCAR BODEET ,SHARA GILLIES ,Dinakaran ,
× RELATED கொலை முயற்சி நடந்த...