×
Saravana Stores

சேது பொறியியல் கல்லூரியில் 30வது ஆண்டு விளையாட்டு விழா

 

மதுரை, செப்.3: மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில், 30வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் எஸ்.முகமது ஜலீல் தலைமை தாங்கினார். கல்லூரி முதன்மை நிர்வாக அதிகாரி எஸ்.எம்.சீனி முகைதீன், இணை முதன்மை நிர்வாக அதிகாரி எஸ்.எம்.சீனி முகமது அலியார் மரைக்காயர், நிர்வாக இயக்குனர் எஸ்.எம்.நிலோபர் பாத்திமா, ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.எம்.நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர். முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். கல்லூரி உடற்பயிற்சி இயக்குனர் சிவகணேஷ் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். சிறப்பு விருந்தினராக இந்திய ரயில்வே சர்வதேச கூடைப்பந்து வீராங்கனை தர்ஷினி மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் பேங்க் துணைத் தலைவர் தேசிய கைப்பந்து வீரர் நாகேஸ்வரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

முன்னதாக தேசியக்கொடி, ஒலிம்பிக் கொடி, கல்லூரி கொடியை கல்லூரி தலைவர் முகமது ஜலீல் ஏற்றினார். மாணவர்கள் அணி வகுப்புடன் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது. கல்லூரி மாணவ, மாணவிகள் சிகப்பு, ஊதா, பச்சை, மஞ்சள் என்ற அணிகளாக பிரிக்கப்பட்டு தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், கைப்பந்து, கூடைப்பந்து, எறிபந்து போட்டிகளில் பங்கேற்றனர். இதில் சிகப்பு அணி 50 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. சிறந்த விளையாட்டு வீரராக இசிஇ மூன்றாம் ஆண்டு மாணவர் நவீன், சிறந்த விளையாட்டு வீராங்கனையாக ஏஐடிஎஸ் இரண்டாம் ஆண்டு மாணவி திவ்யபாரதி தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் வேளாண்மை பொறியியல் துறை தலைவர் முத்து சோலைராஜன் நன்றி கூறினார்.

The post சேது பொறியியல் கல்லூரியில் 30வது ஆண்டு விளையாட்டு விழா appeared first on Dinakaran.

Tags : 30th Annual Sports Festival ,Sethu College ,of Engineering ,Madurai ,Setu College ,President ,Founder ,S. Muhammad Jalil ,Principal Administrative Officer ,SM Seeni Mukaideen ,Sethu Engineering College 30th Annual Sports Festival ,Dinakaran ,
× RELATED செய்யது அம்மாள் கல்லூரியில் அயோடின் விழிப்புணர்வு விழா