×

காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் மேலும் 6 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்

புதுடெல்லி: காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மேலும் 6 வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் செப். 18,25, அக்.1 என 3 கட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மொத்தம் உள்ள 90 தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 15 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. இந்தநிலையில் 9 வேட்பாளர்களை ஏற்கனவே காங்கிரஸ் அறிவித்து இருந்தது. தற்போது காஷ்மீர் தேர்தலில் போட்டியிடும் 2ம் கட்ட பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. அதில் 6 தொகுதிக்கான வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். மத்திய ஷால்டெங் தொகுதியில் காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீது கர்ரா நிறுத்தப்பட்டுள்ளார். மேலும் ரியாசியில் மும்தாஜ் கான், மாதா வைஷ்ணோ தேவி தொகுதியில் பூபேந்தர் ஜம்வால், ரஜோரியிலிருந்து இப்திகார் அகமது, தன்மண்டியில் ஷபீர் அகமது கான், சூரன்கோட் தொகுதியில் முகமது ஷாநவாஸ் சவுத்ரி நிறுத்தப்பட்டுள்ளனர்.

The post காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் மேலும் 6 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : Congress ,Kashmir Assembly elections ,New Delhi ,National Conference Party ,Kashmir Legislative Assembly Election ,
× RELATED ஜம்மு-காஷ்மீரில் குடும்ப...