×

ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கைது

புதுடெல்லி: டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா டெல்லி ஒக்லா பகுதியில் வசித்து வருகின்றார். வக்பு வாரியம் தொடர்பான முறைகேட்டில் இவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதேபோல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்தாக டெல்லி ஊழல் தடுப்புஅதிகாரிகள் இவர் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளதனர். இந்த வழக்குகளின் அடிப்படையில் நேற்று காலை திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் அமானதுல்லா வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினார்கள். இதன் பின்னர் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமானதுல்லாவை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் அமானதுல்லா கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். அதன் பின்னர் விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இதற்கிடையே ஆம் ஆத்மி பெண் எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

The post ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கைது appeared first on Dinakaran.

Tags : AAP MLA ,Amanthullah ,New Delhi ,Delhi ,Aam Aadmi Party MLA ,Amatullah ,Okhla ,CBI ,Waqf Board ,Aam Aadmi Party ,MLA ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் பதிவான...