×

ஜிஐஎஸ் சாப்ட்வேர் மூலமாக 100 சுங்க சாவடிகளை கண்காணிக்க முடிவு

புதுடெல்லி: டெல்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஜிஐஎஸ் சாப்ட்வேர் மூலமாக 100 சுங்க சாவடிகள் கண்காணிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுங்கசாவடிகளில் வாகன நெரிசல் ஏற்படுவதாக தேசிய நெடுஞ்சாலை உதவி எண் மூலமாக புகார்கள் வந்துள்ளது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட சுங்கசாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சுங்க சாவடிகள் ஜிஐஎஸ் என்ற மென்பொருள் மூலமாக கண்காணிக்கப்படும். சுங்க சாவடிகளில் வாகனங்களின் வரிசையில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் இருக்கும்போது நேரலை கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பானது வாகன நெரிசல் எச்சரிக்கைகளை வழங்கும். மேலும் லேன்கள் அமைப்பது குறித்த பரிந்துரைகளும் வழங்கப்படும். இந்த சேவை மேலும் பல சுங்கச்சாவடிகளுக்கு படிப்படியாக விரிவுபடுத்தப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஜிஐஎஸ் சாப்ட்வேர் மூலமாக 100 சுங்க சாவடிகளை கண்காணிக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,National Highways Authority ,Delhi ,National Highways Agency ,Dinakaran ,
× RELATED காவலில் இருக்கும் குற்றவாளிகள்...