×

உச்ச நீதிமன்றம் கேள்வி செந்தில் பாலாஜி வழக்கு ஆளுநர் தாமதம் ஏன்?

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஒய்.பாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவில்,‘‘செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் புகார் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி இருந்தும் ஏழு மாதங்கள் கழித்து ஆளுநர் தாமதமாக ஒப்புதல் வழங்கியது ஏன்? என்பது கேள்வியாக உள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தில் செப்டம்பர் 30ம் தேதிக்குள் சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரணை குறித்த முழு நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் செந்தில் பாலாஜி வழக்கை விசாரணையை கீழமை நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும். அதேப்போன்று தமிழ்நாடு அரசு தரப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ள வழக்கறிஞரை மாற்றம் செய்ய முடியாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post உச்ச நீதிமன்றம் கேள்வி செந்தில் பாலாஜி வழக்கு ஆளுநர் தாமதம் ஏன்? appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Governor ,Senthil Balaji ,New Delhi ,Y. Balaji ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED நீதிமன்ற காவலில் இருக்கும்...