×
Saravana Stores

புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 7 நாட்களில் மேட்டூரில் புனல் மின் நிலையத்தின் முதல்கட்ட பணிகளை தொடங்கியது கிரீன்கோ நிறுவனம்

சேலம் : சேலம் மாவட்டம் மேட்டூரில் ரூ.5947 கோடியில் கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம் நீரேற்று புனல் மின் நிலையம் அமைக்கிறது. தமிழக அரசு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அதிக முதலீடுகளை ஈர்த்து வருகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையானது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்த துறையில் அதிகளவு முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கிரீன்கோ நிறுவனத்துடன் ரூ.20,114 கோடி முதலீட்டில் 3 புனல் மின் நிலையங்களை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களில் ஒன்று கிரீன்கோ குழுமத்தைச் சேர்ந்த கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம் ஆகும். இதனிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 7 நாட்களில் முதல்கட்ட பணிகளை தொடங்கியது கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம். அதன்படி, ரூ.5947 கோடி முதலீட்டில் மேட்டூரில் உள்ள பாலமலை மற்றும் நவிப்பட்டி ஆகிய கிராமங்களில் மின்நிலையம் அமைக்க கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் கிரீன்கோ எனர்ஜிஸ் விண்ணப்பம் அளித்துள்ளது. இந்த 3 புனல் மின்நிலையங்கள் மூலம் 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 7 நாட்களில் மேட்டூரில் புனல் மின் நிலையத்தின் முதல்கட்ட பணிகளை தொடங்கியது கிரீன்கோ நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : Greenco ,Punal Power Station ,Mettur ,Salem ,Greenco Energies ,Neerethu Funal Power Station ,Tamil Nadu government ,Punal Power Plant ,MoU ,Dinakaran ,
× RELATED 90 ஆண்டுகளில் முதல்முறையாக தூர்வாரப்படும் மேட்டூர் அணை!