×
Saravana Stores

கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை!!

சென்னை : கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்ற கல்வி நிலையங்களில் பாலியல் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கல்வி நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் காணொளி வாயிலாக இன்று மாலை 3 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பாளர்கள், ஆணையர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரிகளின் முதல்வர்கள், கல்வி அலுவலர்கள் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக துறைசார்ந்த அதிகாரிகள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து காணொலிக் காட்சி மூலமாக கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் இதுகுறித்த தகவலை அனைத்து துறையினருக்கும் தெரிவித்து கூட்டத்தில் அனைவரும் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் . உள்துறை செயலர் தீரஜ் குமார் மின்னஞ்சல் வாயிலாக உத்தரவிட்டுள்ளார்.

The post கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை!! appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு...