×

கோட்டார் அரசு மருத்துவ கல்லூரியில் கலெக்டர் ஆய்வு

 

நாகர்கோவில், செப்.2: கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதியினை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கன்னியாகுமரி மாவட்டம், கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு ஆய்வு செய்வதற்காக கலெக்டர் அழகுமீனா, நேற்று நேரில் சென்றார்.அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ளவேண்டும் என்று கூறிய அவர் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து நாகர்கோவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். விடுதி சமையறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். ஆய்வில் துறை அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

The post கோட்டார் அரசு மருத்துவ கல்லூரியில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Govt Medical College ,Kotar ,Nagercoil ,Akummeena ,Kotar Government Ayurvedic Medical College Hospital ,Adi Dravidar Hospital ,Kanyakumari District ,Kottar Government Ayurvedic Medical College Hospital ,Collector ,Kottar Government Medical College ,Dinakaran ,
× RELATED ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில்...