×

புது ஆத்தூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

 

பெரம்பலூர், செப்.1: பெரம்பலூர் மாவட்டம், புது ஆத்தூர் கிராமத்தில் நேற்று (31ம் தேதி) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) புதுஆத்தூர் கிளை சார்பில் போதைப் பொருள் எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாலை 5.20 மணிக்கு புதுஆத்தூர் தமிழ்நாடு தவ் ஹீத் ஜமாத் மர்க்கஸ், பேருந்து நிறுத்தம், கிழக்கு தெரு, மஜ்தூர் ரஹ்மத் பள்ளிவாசல் வழியாக 500 மீட்டர் தூரம் நடைபெற்ற போதைபொருள் எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வுப் பேரணிக்கு தமிழ்நாடு தவ் ஹீத் ஜமாத் அமைப்பின் கிளைத்தலைவர் அப்துல் ரஜாக் தலைமை வகித்தார்.பேரணியில் 40 பெண்கள் உள்பட 70பேர் கலந்து கொண்டனர்.

The post புது ஆத்தூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Tawheed Jamaat anti drug awareness rally ,Pudu Attur ,Perambalur ,Perambalur district ,Tamil Nadu Tawheed Jamaat ,TNTJ ,Pudu Athur Tamil Nadu ,Tamil Nadu Tawheed Jamaat anti-drug awareness rally ,Pudu Athur ,
× RELATED மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு