டெஸ்பூர்: அசாமின் சோனிப்பூர் மாவட்டத்தில் தெகியாஜூலி பகுதியில் சேசா ஆற்றங்கரையோரத்தில் சிலர் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது சுமார் இரண்டு அங்குலம் நீளமுள்ள பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இது மார்டர் புகை குண்டு என தெரியவந்தது.
இந்த குண்டு கடந்த 1962ம் ஆண்டு இந்தியா – சீனா இடையே நடந்த போரின்போது பயன்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த குண்டு சீனாவால் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் உதவியுடன் மார்டர் புகை குண்டு மீட்கப்பட்டது. பின்னர் இந்த குண்டு மிஸாமாரி முகாமில் இருந்து லெப்டினன்ட் கர்னல் அபிஜித் மிஸ்ரா தலைமையிலான குழுவின் உதவியுடன் பாதுகாப்பாக வெடிக்க வைத்து அப்புறப்படுத்தப்பட்டது.
The post இந்தியா -சீனா போரில் பயன்படுத்திய புகை குண்டு: அசாமில் அப்புறப்படுத்தப்பட்டது appeared first on Dinakaran.