ஈரோடு மாநகராட்சியில் மாமன்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஈரோடு எம்.பி. பிரகாஷ் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கேன்சர் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. என்னிடம் கடந்த 3 மாதங்களில் மருத்துவ பரிந்துரைக்காக வந்த 60 பேரில், 40 பேர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. இதில், 2 வயது குழந்தையும் உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலும் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே நிலை நீடித்தால் கேன்சர் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வாழ தகுதியற்ற ஊராக மாறி விடுமோ என்ற அச்சம் ஏற்படுகின்றது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஈரோடு மாநகராட்சியில் நிதி நெருக்கடியால், வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்வதில் பிரச்னை இருக்கிறது. ஈரோடு ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்ட பிறகு, ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தொகையை சிறப்பாக பயன்படுத்தவில்லை. மாநகராட்சியில் வளர்ச்சித் திட்டப்பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு பேசினார்.
The post ஈரோட்டில் கேன்சர் பாதிப்பு அதிகரிப்பு: எம்.பி வேதனை appeared first on Dinakaran.