×

8 மாதத்துக்கு முன்பு திறந்து வைத்த சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்ததற்கு மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி

பால்கர்: மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்ததற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். கடந்த 26 ம் தேதி இந்த சிலை திடீரென உடைந்து விழுந்தது. நிறுவிய 8 மாதத்திலேயே சிலை விழுந்ததால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசைக் கடுமையாக விமர்சித்தனர். தரமற்ற கட்டுமானமே இந்த நிலைமைக்கு காரணம் என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் ரூ.76ஆயிரம் கோடி மதிப்பிலான வத்வான் துறைமுகத்திட்டத்துக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ‘‘சத்ரபதி சிவாஜி மகராஜ் என்பது வெறும் பெயரோ, அரசனோ இல்லை. என்னை பொறுத்தவரை அவர் தெய்வம். நான் பாதத்தில் தலைவைத்து வணங்குகிறேன். சிலை சேதம் அடைந்ததால் எனது தெய்வத்திடம் தலைவணங்கி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நமது மதிப்புக்கள் வேறுபட்டவை. என்னை பொறுத்தவரை எனது தெய்வத்தை விட எனக்கு எதுவும் பெரியது இல்லை ” என்றார்.

The post 8 மாதத்துக்கு முன்பு திறந்து வைத்த சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்ததற்கு மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Modi ,Chhatrapati Shivaji ,PM Modi ,Maharashtra ,Rajkot Fort ,
× RELATED எனது கடவுள் சத்ரபதி சிவாஜியிடம்...