- தமிழ்நாடு சாம்பியன்ஸ் நம்பிக்கை
- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- ஜகதீஷ் தில்லி
- பாரா பேட்மிண்டன் போட்டித் தொடரில்
- இந்தோனேஷியா
- ஜப்பான்
சென்னை: தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து இந்தோனேசியா மற்றும் ஜப்பானில் நடைபெற இருக்கும் பாரா பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்க உள்ள பாரா விளையாட்டு வீரர் ஜெகதீஷ் டில்லிக்கு செலவின தொகையாக ரூ.2 லட்சிற்கான காசோலை, தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ள 6 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு செலவின தொகையாக ரூ. 15.45 லட்சத்திற்கான காசோலை, 12 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.9.55 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், சென்னையின் எப்சி ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விளையாட்டு வீரர்கள் 2024 முதல் 2026 வரை நடைபெற உள்ள சென்னையின் எப்சி கால்பந்து அணி பயிற்சி மேற்கொள்ளவும், போட்டிகள் நடத்தவும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் உள்ள ‘பி’ மைதானத்தை மேம்படுத்திட ரூ.30 லட்சம் நிதியை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையின் எப்சி ஸ்போர்ட்ஸ் பிரைவேட் நிறுவனத்திடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, சென்னையின் எப்சி ஸ்போர்ட்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ரூ.57 லட்சம் காசோலை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.