×

ஃபார்முலா 4 பந்தயம் நடத்த மேற்கொண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: ஃபார்முலா 4 பந்தயம் நடத்த மேற்கொண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஆகஸ்ட் 31 ,செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாட்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 பந்தயம் நடத்த உள்ளனர். இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. இதற்கு தடை விதிக்க கோரி பாஜக செய்தி தொடர்பாளர் ஜே.என்.எஸ். பிரசாத் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கானது உயர்நீதிமன்ற சிறப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி இதே வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தார். இதற்கான மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் ரகவாச்சாரி ஆஜராகி மறுப்பு தெரிவித்து கார் பந்தயம் நடத்துவதற்கான அரசு செலவிட்ட தொகை திருப்பி செலுத்த வேண்டும் என தனியார் அமைப்பு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதற்கும் இந்த வழக்கிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை . அதே போன்று பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

பொது சாலையை உரிமை எடுக்க அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார். பொதுமக்கள் சாலையை பயன்படுத்தி பந்தயம் நடத்துகின்றனர் இதனை ஏற்க முடியாது என்றும் வாதிட்டார். இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் கடந்த முறை கார் பந்தயத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகவும், சில கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் 7 நிபந்தனைகள் விதித்தார்கள். தற்போது அந்த 7 நிபந்தனைகளும் பின்பற்றப்படுவதாகும் குறிப்பிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஏற்கனவே நீதிமன்றம் கார் பந்தயம் தொடர்பான அறிக்கையை பிற்பகல் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

 

The post ஃபார்முலா 4 பந்தயம் நடத்த மேற்கொண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,Formula 4 ,CHENNAI ,Chennai High Court ,Tamil Nadu Sports Development Authority ,Dinakaran ,
× RELATED ஃபார்முலா-4 பந்தயத்துக்கு காலநீட்டிப்பு கோரி ஐகோர்ட்டில் முறையீடு..!!