- மத்திய அமைச்சர்
- சுரேஷ் கோபி
- திருவனந்தபுரம்
- திருச்சூர்
- பொலிஸ் ஆணையாளர்
- இளங்கோ
- காங்கிரஸ் எம்.எல்.ஏ.
- மாநில மத்திய அமைச்சர்
- சுரேஷ் கோபி
திருவனந்தபுரம்: திருச்சூரில் பத்திரிகையாளர்களை தள்ளிவிட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்த திருச்சூர் போலீஸ் கமிஷனர் இளங்கோ உத்தரவிட்டுள்ளார். ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபி நேற்று முன்தினம் திருச்சூர் வந்திருந்தார். அப்போது நடிகர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து பத்திரிகையாளர்கள் அவரிடம் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால் திடீரென ஆவேசமடைந்த அவர், பத்திரிகையாளர்களை பிடித்து தள்ளிவிட்டு காரில் ஏறிச் சென்றார். இதில் பத்திரிகையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சுரேஷ் கோபி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவான அனில் அக்கரே திருச்சூர் போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் அளித்தார். இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்துமாறு உதவி கமிஷனருக்கு திருச்சூர் நகர போலீஸ் கமிஷனர் இளங்கோ நேற்று உத்தரவிட்டார்.
The post பத்திரிகையாளர்களை தள்ளிவிட்ட விவகாரம் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபிக்கு எதிரான புகார் குறித்து போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.