- தமிழ்நாடு அரசு
- உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சம்மன்களுக்கு உயர்நீதிமன்றம்
- அமலாக்கத் துறை
- தின மலர்
புதுடெல்லி: மணல் குவாரி தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கொடுத்த விளக்கத்தை ஏற்பதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து நேற்று உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மணல் குவாரி விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அமலாக்கத்துறையால் வழங்கப்பட்ட சம்மனுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை விதித்தது.
இதையடுத்து இந்த உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர்களை விசாரணைக்காக நேரில் ஆஜராக உத்தரவிட்டது.இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம்.திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அமித் ஆனந்த் திவாரி மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர், இந்த விவகாரத்தில் வழக்கில் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஒருசில நிலுவையில் இருப்பவைகள் அடுத்த ஒரு வாரத்தில் கொடுத்து முடிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அதனை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
The post மணல் குவாரி தொடர்பான வழக்கு; தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்பு : வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம் appeared first on Dinakaran.