×

சிபிஐ அதிகாரியாக நடித்து 2 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி

கோவை: கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (75). இவர், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உதவி பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை சிபிஐ அதிகாரி வினய் என்ற பெயரில் ஒருவர் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசினார்.

அவர், ஒரு கூரியர் நிறுவனத்தின் பெயரில் ஒரு பார்சல் வந்திருப்பதாகவும், அந்த பார்சலில் போதை மருந்துகள், சர்வதேச சிம் கார்டுகள் இருப்பதாகவும் கூறினார். வழக்கு போடாமல் இருக்க பணம் அனுப்பும்படி கூறி பல்வேறு தவணைகளில் ரூ.35 லட்சம் பெற்றுள்ளார். பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதேபோல் இந்திய ராணுவத்தில் ஹவில்தார் ஆக பணியாற்றி ஓய்வு பெற்ற மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பிராங்க்ளின் (43) என்பவரிடமும் சிபிஐ அதிகாரி போல் சீருடை அணிந்த நபர் வாட்ஸ்அப் வீடியோ காலில் மிரட்டி ரூ.25 லட்சம் பெற்றுள்ளார். புகாரின்படி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post சிபிஐ அதிகாரியாக நடித்து 2 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : CBI ,Coimbatore ,Gopalakrishnan ,Sulur ,Nationalized Bank ,WhatsApp ,Mumbai ,Vinay ,Dinakaran ,
× RELATED மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த...