×

கோவையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தது போலீஸ்

கோவை: கோவையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ஆல்வினை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தது. குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகமால் இருந்து வந்த ரவுடி ஆல்வினை போலீஸ் தேடி வந்தது. கொடிசியா மைதானத்தில் ரவுடி ஆல்வின் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு போலீஸ் விரைந்தது. நள்ளிரவு 2.30 மணிக்கு ரவுடி ஆல்வினை பிடிக்க முயன்றபோது அவர் கத்தியால் தாக்கியதில் தலைமைக் காவலர் படுகாயம் அடைந்தார். தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி ஆல்வின் படுகாயம் அடந்தார்.

The post கோவையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தது போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Rawudi ,Goa ,Rawudi Alvin ,Ajaragamal ,Godisia Stadium ,
× RELATED கோவையில் ரவுடி ஆல்வின்...