×

அக்டோபரில் யு-வின் தளத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: பிரதமர் மோடியின் தலைமையில் பாஜ மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து 100 நாட்கள் ஆவதையொட்டி ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் ஜேபி நட்டா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் நட்டா, நாடு முழுவதும் ஆன்லைன் மூலமாக தடுப்பூசி விவரங்களை சேகரித்து ஒருங்கிணைத்து நிர்வகிக்கும் வகையில் தற்போது சோதனை அடிப்படையில் செயல்பட்டு வரும் யு-வின் தளத்தை அடுத்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தடுப்பூசி மற்றும் மருந்துகளின் நிரந்தர டிஜிட்டல் பதிவை பராமரிப்பதற்காக இந்த போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

The post அக்டோபரில் யு-வின் தளத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Modi ,U ,New Delhi ,Union Health Minister ,JP Nadda ,Delhi ,BJP ,Minister ,Natta ,
× RELATED 23 ஆண்டு பொது வாழ்க்கை தனித்துவ...