×
Saravana Stores

வரும் 30ம் தேதி பாஜகவில் இணைகிறார் சம்பாய் சோரன்: ஜார்கண்ட் அரசியலில் பரபரப்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரும் ஜே.எம்.எம். கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன், ராஞ்சியில் அவரது ஆதரவாளர்களுடன் வரும் 30ம் தேதி பாஜகவில் இணைகிறார். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. அதன் பின் ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வரானார். ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார். பதவி விலகிய சம்பாய் சோரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜவில் சேருவார் என்று தகவல் வெளியானது.

இதனிடையே டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்தார். இந்நிலையில் வரும் 30ம் தேதி சம்பாய் சோரன் பாஜகவில் இணைகிறார். வரும் 30-ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ., வில் இணைய உள்ளதாகவும், ராஞ்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் பா.ஜ., தலைவர்களை சந்தித்து அவர்கள் முன்னிலையில் பா.ஜ, வில் ஐக்கியமாக திட்டமிட்டுள்ளார். இதனை அசாம் பா.ஜ, முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா உறுதி செய்துள்ளார். இந்தாண்டு இறுதியில் ஜார்க்கண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் ஜார்கண்ட் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post வரும் 30ம் தேதி பாஜகவில் இணைகிறார் சம்பாய் சோரன்: ஜார்கண்ட் அரசியலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Sambai Soran ,BJP ,Jharkhand ,Ranchi ,Former ,Chief Minister ,J. M. M. ,Sambai Soren ,Hemant Soran ,Enforcement Department ,JMM ,
× RELATED அரசியல் ரீதியாக தோற்கடிக்க...