- கலைஞர் நூற்றாண்டு உரை
- திருவள்ளூர்
- பொன்னேரி
- சிறப்பாக உள்ளது
- திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
- திமுக இளைஞர்
- திருவள்ளூர் கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டி
பொன்னேரி: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பொன்னேரியில் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சு போட்டி என் உயிரினும் மேலான என்ற தலைப்பில் நேற்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தந்தை பெரியார், பேரறிஞர்அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோரை பற்றி 10க்கும் மேற்பட்ட தலைப்புகளில் மாணவர்கள் உரையாற்றினர். இதற்கு நடுவர்களாக வழக்கறிஞர் அருள்மொழி, தமிழ் காமராசன், நாகை நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுத்தனர்.
மாவட்ட செயலாளர் டிஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் அப்துல் மாலிக், பிரபு கஜேந்திரன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் செய்து இருந்தார்.
பொன்னேரி நகர செயலாளர் ரவிக்குமார் நகராட்சி மன்ற தலைவர் பரிமாள விஸ்வநாதன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் மோகன் பாபு, முரளிதரன், சங்கர், யுவராஜ், கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத் தலைவர் பகலவன், மாநில தகவல் தொடர்புத்துறை துணை செயலாளர் சி.எச்.சேகர், எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் ஜெ.மூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ், நிர்வாகிகள் அன்புவாணன், கதிரவன், கன்னிகை பேர் ஸ்டாலின், பா.செ.குணசேகரன், வெங்கடாசலபதி ஒன்றிய செயலாளர் வள்ளூர் ரமேஷ் ராஜ், சோழவரம் செல்வ சேகரன், சக்திவேல் ஆசான புதூர் சம்பத்குமார் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் பொன்னேரி நகர இளைஞரணி அமைப்பாளர் தீபன் நன்றி கூறினார்.
The post திருவள்ளூரில் கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சு போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் appeared first on Dinakaran.