ஆரணி: ஆரணி அருகே புதுச்சேரி கோவிலுக்கு சென்ற பக்தர்களின் வேன் பின்பக்கம் டயர் வெடித்து விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே துந்தரீகம்பட்டு கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மாத மாதம் புதுச்சேரியில் உள்ள பிரித்திரிங்க தேவி அம்மன் கோவிலுக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.
மேலும் இன்று ஆரணி டவுன் அருணகிரிசத்திரம் பகுதியிலிருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் புதுச்சேரி பிரித்திரிங்க தேவியம்மன் ஆலயத்திற்கு செல்ல டூரிஸ்ட் வேனில் சென்றுள்ளனர். அருணகிரிசத்தரம் பகுதியை சேர்ந்த டிரைவர் முரளி வேனை ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், ஆரணி விழுப்புரம் நெடுஞ்சாலை விண்ணமங்கலம் கூட்ரோடு அருகில் சென்ற போது திடீரென வேனின் பின் பக்கம் டயர் வெடித்து விபத்துகுள்ளானது. இதில் பயணம் செய்த அருணகிரி சத்திரம் பகுதியை சேர்ந்த நடராஜன் அமுதவள்ளி தம்பதியினரின் 8 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
பின்னர், படுகாயமடைந்த 20 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்பூலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். இதில் 5 வயது சிறுவனை மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கோவிலுக்கு சென்ற பக்தர்களின் வேன் டயர் வெடித்ததில் 8 மாத குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post புதுச்சேரி கோவிலுக்கு சென்ற பக்தர்களின் வேன் விபத்து; 8 மாத குழந்தை உயிரிழந்த சோகம்! appeared first on Dinakaran.