×

மருதாணி சிவக்க… சிவக்க…

நன்றி குங்குமம் தோழி

மருதாணி கையில் சிவப்பான நிறத்தில் இருக்க என்ன செய்யலாம்…

*சர்க்கரை மற்றும் எலுமிச்சை கலந்த சாறை மருதாணியின் மீது தடவினால், விரைவில் காய்ந்து விடாமல் நீண்ட நேரத்திற்குகையில் ஒட்டிக் கொண்டு இருப்பதால், நல்ல சிவப்பு நிறத்தை தரும்.

*நான்கு கிராம்புகளை நன்றாக தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை மருதாணி பேஸ்ட் கலக்க பயன்படுத்தினால், நல்ல சிவப்பு நிறம் கிடைக்கும்.

*கைகள் மற்றும் கால்களில் இடும் மருதாணிகளை தண்ணீரைக் கொண்டு கழுவக்கூடாது. உங்கள் கையில் மருதாணி நல்ல சிவப்புடன் இருக்க வேண்டும் என்றால் கடுகு எண்ணெயை கையில் தடவி மருதாணியை நீக்கலாம். கடுகு எண்ணெய் இல்லை என்றால் யூகலிப்டஸ் எண்ணெயை உபயோகிக்கலாம்.

*கைகளில் மருதாணியை இட்ட பிறகு அதில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து மணி நேரம் தண்ணீரைத் தொடக்கூடாது.

*மருதாணியை நீக்கிய பிறகு கையில் சிறிது நேரம் எண்ணெயை தடவி வைக்க வேண்டும். இது போன்ற நடைமுறைகளை செய்தாலே கைகளில் மருதாணி செக்கச் சிவப்பாக நிச்சயம் பிடிக்கும். மருதாணி இடுவது அழகுக்காக மட்டுமில்லாமல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

*ரத்தப்போக்கினை தடுத்து மாதவிடாய் பிரச்னையை சரி செய்கிறது.

*கால்களில் பித்த வெடிப்பை வரவிடாமல் கால்களை பாதுகாக்கிறது.

*உடல் உஷ்ணத்தை குறைத்து உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள் வரவிடாமல் தடுக்கிறது.

– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

The post மருதாணி சிவக்க… சிவக்க… appeared first on Dinakaran.

Tags : Henna Sivaka ,Sivaka ,
× RELATED ஆமுக்த மால்யத