×
Saravana Stores

நடுக்கடலில் படகு தீப்பிடித்து எரிந்தது: 6 மீனவர்கள் உயிர் தப்பினர்

நித்திரவிளை: குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே நீரோடி மீனவ கிராமத்தை சேர்ந்த ராபி என்பவர் தனக்கு சொந்தமான ஜகோவா நிசி என்ற பைபர் படகில் கடந்த 23ம் தேதி, கேரள மாநிலம் மலப்பா துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க 5 பேருடன் சென்றுள்ளார். நேற்று முன்தினம் மதியம் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது படகு திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது. அதிர்ச்சியடைந்த மீனவர்கள் தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சி செய்தும் முடியவில்லை.

தங்களை காப்பாற்றுமாறு படகில் இருந்தவாறு கூச்சலிட்டனர். அருகில் படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த சக மீனவர்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர். எரிந்து கொண்டிருந்த படகையும் கயிறு கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வர முயன்றனர். அதற்குள் படகு முழுவதும் எரிந்து கடலில் மூழ்கியது. மின் பேட்டரியில் ஏற்பட்ட கசிவே படகு தீப்பிடித்து எரிய காரணம் எனக் கூறப்படுகிறது. தற்போது நடுக்கடலில் படகு தீப்பிடித்து எரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post நடுக்கடலில் படகு தீப்பிடித்து எரிந்தது: 6 மீனவர்கள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Nithravilai ,Rabi ,Neerodi ,Kollangode, Kumari district ,Malappa ,Kerala ,Nisi ,Dinakaran ,
× RELATED நித்திரவிளை அருகே கொத்தனாரை தாக்கிய 4 பேர் கைது