×
Saravana Stores

கேரளாவில் எலிக்காய்ச்சல் பரவுகிறது: இந்த வருடம் இதுவரை 121 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் எலிக்காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இந்த வருடம் இதுவரை 121 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 104 பேரின் மரணத்திற்கு எலிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. லெப்டோஸ்பைரோசிஸ் என அழைக்கப்படும் எலிகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் காய்ச்சல் கேரளாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா உடலுக்குள் நுழைந்தால் 5 முதல் 15 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படத் தொடங்கும்.

உடனடியாக உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இந்த வருடம் கேரளாவில் இதுவரை இந்தக் காய்ச்சல் பாதித்து 121 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 104 பேரின் மரணத்திற்கு எலிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இந்த மாதத்தில் இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர்.இந்த வருடம் இதுவரை 1936 பேருக்கு எலிக்காய்ச்சல் பரவியுள்ளது. மேலும் 1581 பேருக்கு இந்தக் காய்ச்சல் பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

The post கேரளாவில் எலிக்காய்ச்சல் பரவுகிறது: இந்த வருடம் இதுவரை 121 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala ,
× RELATED சபரிமலை பக்தர்களுக்கு கழிப்பறை உள்பட...