- காங்-என்.சி
- மேகபூபா முஃப்தி
- ஸ்ரீநகர்
- முன்னாள்
- முதல் அமைச்சர்
- மெஹ்போபா முஃப்தி
- காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கூட்டணி
- பிடிபி
- ஜம்மு மற்றும்
- காஷ்மீர்...
- காங்கிரஸ்-என்சி கூட்டணி
- மேகபூபா முப்தி
- தின மலர்
ஸ்ரீநகர்: பிடிபி கட்சியின் செயல் திட்டங்களை ஏற்க தயார் என்றால் காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றும் அனைத்து தொகுதிகளையும் விட்டு கொடுக்க தயார் என முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்தார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதல்முறையாக சட்ட பேரவைக்கு வரும் செப்டம்பர் 18,25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
தேர்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சி அணுகியதா என அவரிடம் கேட்டபோது,‘‘ காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு உள்ளிட்ட விஷயங்களை ஏற்று கொண்டால், காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியை ஆதரிப்போம்.
ஒரு இடத்தில் கூட போட்டியிடாமல் அனைத்து தொகுதிகளையும் அந்த கூட்டணிக்கே விட்டு விடுவோம். ஜம்மு காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பது தான் எங்கள் கட்சியின் முக்கிய நோக்கம். பாஜவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை’’ என்றார்.
The post எங்கள் செயல் திட்டங்களை ஏற்றுக்கொண்டால் காங்.-தேசிய மாநாட்டு கூட்டணிக்கு ஆதரவு: மெகபூபா முப்தி அறிவிப்பு appeared first on Dinakaran.