×
Saravana Stores

உரிமை கோராத 12 உடல்கள் போலீசாரே அடக்கம் செய்தனர்: தஞ்சையில் நெகிழ்ச்சி

தஞ்சை: தஞ்சை மாநகரில் தாலுகா, தெற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் அனாதையாக இறந்து கிடந்த 12 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத கிடங்கில் வைத்தனர். பிரேத கிடங்கில் அடையாளம் தெரியாதவர்களின் சடலங்கள் குறிப்பிட்ட நாட்கள் வரை வைத்து பாதுகாக்கப்படுவது வழக்கம். அந்த குறிப்பிட்ட நாட்களில் இறந்தவர்களின் உடல்களை உரியவர்கள் வந்து தகுந்த ஆதாரத்துடன் உரிமை கோர வேண்டும். இல்லையெனில் இறந்தவர்களின் உடல்கள் ஆதரவற்ற சடலங்களாக கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு அருகில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்படும்.

அதன்படி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத கிடங்கில் உள்ள 12 உடல்களை ஆதரவு கோரி யாரும் வராததால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, சிறப்பு எஸ்ஐ மனோகரன் ஆகியோர் அந்த 12 உடல்களை அடக்கம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து 12 பேரின் உடல்களை அடக்கம் செய்ய இருப்பதாக மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் போலீசார் தெரிவித்தனர். இதை ஏற்று கொண்ட நிர்வாகம், உரிய சான்றிதழ்களில் போலீசாரிடம் கையெழுத்து பெற்று இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய கொண்டு செல்ல அனுமதித்தனர். இதையடுத்து 12 பேரின் உடல்கள் வடக்குவாசலில் உள்ள ராஜாகோரி மயானத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

The post உரிமை கோராத 12 உடல்கள் போலீசாரே அடக்கம் செய்தனர்: தஞ்சையில் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : THANJAI ,SOUTH ,WEST ,EAST ,COLLEGE POLICE STATION ,TANJAI MANAGAR ,TANJAI MEDICAL COLLEGE HOSPITAL ,
× RELATED அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட ஐ.டி. விங் இணைச் செயலாளர் போக்சோ வழக்கில் கைது!