×

வீட்டின் கழிவறையில் அடைத்து வைத்து 6 வயது மகளை சீரழித்த கொடூரம்: புதுச்சேரி புரட்சி பாரதம் கட்சி தலைவர் கைது

பெரம்பூர்: வீட்டின் கழிவறையில் வைத்து 6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புதுச்சேரி மாநில புரட்சி பாரதம் கட்சி தலைவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னை புளியந்தோப்பு பெரம்பூர் பேரக்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் புரட்சி ரவி (எ) புருஷோத்தமன் (45). இவர் பாண்டிச்சேரி மாவட்ட புரட்சி பாரதம் கட்சி தலைவர். பர்னிஷ் செய்யும் ஆயில் வியாபாரம் செய்கிறார். இவருக்கு பாண்டிச்சேரியை சேர்ந்த பெண்ணுடன் திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர். இந்தநிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 வருடங்களாக ரவி அங்கு செல்வதில்லை என்று தெரிகிறது. இதனால் தனது இரண்டாவது மனைவியுடன் புளியந்தோப்பில் வசித்து வருகின்றார். இவர் மூலம் 18 வயது மற்றும் 14 வயது மற்றும் 6 வயதில் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் 3வது குழந்தை அதே பகுதியில் உள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படிக்கிறார்.

நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் புளியந்தோப்பில் இருந்து 6 வயது குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது தலையில் அடிபட்டு உள்ளது என தகவல் கிடைத்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரித்தபோது, ‘’கட்டிலில் இருந்து கீழே விழுந்து குழந்தைக்கு அடிபட்டுள்ளது என்றும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை’’ என்று ரவி தெரிவித்துள்ளார். இதன்பிறகு நேற்றிரவு 7 மணி அளவில், எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் இருந்து டாக்டர் ஒருவர், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சரோஜினியிடம் தொடர்பு கொண்டு, ‘’குழந்தையின் உடம்பில் காயங்கள் உள்ளது. பிறப்புறுப்பில் காயம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இன்ஸ்பெக்டர் எழும்பூர் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது குழந்தையின் தாய் ‘’எனது மகள் வெளியே செல்லவில்லை.

வீட்டில் எனது கணவர் மட்டும் தான் உள்ளார். வேறு ஆண் நபர்கள் கிடையாது’’ என்று தெரிவித்துள்ளார். இதனால் தந்தை ரவி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கோபம் அடைந்த ரவி, ‘’நான் ஒரு கட்சியில் பெரிய பொறுப்பில் இருக்கிறேன். என்னையே சந்தேகப்படுகிறீர்களா’’ என்று கேட்டு இன்ஸ்பெக்டருடன் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொண்டனர். காவல் நிலையம் அழைத்து வந்து ரவியிடம் விசாரித்தபோது, தனது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். அவர், ‘’குழந்தையை வீட்டில் உள்ள கழிவறைக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில் குழந்தை வெளியே ஓடிவரும்போது கீழே விழுந்து தலையில் அடிபட்டுள்ளது. உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ரவியின் மனைவியிடம் விசாரித்தபோது, ‘’ரவியின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் முதல் மனைவி குடும்பத்தினர் அவரை ஒதுக்கிவிட்டனர். அவரின் நடவடிக்கை சரியில்லை என்பதை அறிந்ததும் முதல் 2 பெண் பிள்ளைகளையும் உஷாராக இருக்கும்படி கூறியிருந்தேன். 3 வயது மகளுக்கு 6 வயது என்பதால் அவளிடம் எதுவும் சொல்ல முடியவில்லை. ரவியின் செயல் பிடிக்காமல் 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்துவிட்டேன். எப்படியோ முதல் குடும்பத்தைவிட்டு என்னை கண்டுபிடித்து மீண்டும் இங்கு வந்துவிட்டார்’ என்றார். தற்போது பாதிக்கப்பட்ட குழந்தை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இதனிடையே போக்சோ சட்டத்தின் கீழ் ரவி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வீட்டின் கழிவறையில் அடைத்து வைத்து 6 வயது மகளை சீரழித்த கொடூரம்: புதுச்சேரி புரட்சி பாரதம் கட்சி தலைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Puducherry Revolution Bharat Party ,Perampur ,Puducherry State Revolution Bharat Party ,Revolution ,Ravi (A ,Chennai Pulianthopu Perambur Barracks Road ,Puducherry Revolution Party ,
× RELATED காதலிக்க பெற்றோர் எதிர்ப்பு..? மாணவி...