×

மணம்பூண்டி தென்பெண்ணை ஆற்றிலிருந்து முகையூர் ஊராட்சி ஒன்றிய கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

* திட்டக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்

* நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் பழனி உறுதி

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றிய கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்று திட்டக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட திட்ட குழுகூட்டம் மாவட்ட ஊராட்சிகுழு அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் பழனி தலைமை தாங்கி பேசியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் நகர்ப்புறத்திற்கு நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை உள்ளடக்கிய உறுப்பினர்களை கொண்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இக்குழுவின் முக்கிய நோக்கம், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை தேர்ந்தெடுந்து மாநில திட்டக்குழுவிற்கு அனுப்பும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில், ரேடியோலஜி துறையில் கூட்ட நெரிசலை தவிர்த்திடும் பொருட்டு ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் எம்ஆர்ஐ கருவி அமைப்பதற்கான கட்டடம் மற்றும் காத்திருப்போர் அறை அமைத்திட மாவட்ட திட்டக்குழு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாநில திட்டக்குழு அனுப்பப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதை தொடர்ந்து வருகிற நிதிநிலை அறிக்கையில் இதுதொடர்பான நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், மாவட்டத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்தும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தெரிவித்திடலாம், இதுதொடர்பாக மாநில திட்டக்குழு பரிந்துரைக்கப்படும். அந்த வகையில், முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வசந்தகிருஷ்ணாபுரம், ஆடூர்கொளப்பாக்கம், வேலாகுளம், கொடுக்கபட்டு ஊராட்சி, கொடுக்கப்பட்டு ஆதிச்சனூர் மற்றும் கோட்டமருதூர் ஆகிய ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறையினை பூர்த்தி செய்திட மணம்பூண்டி தென்பெண்ணையாற்றிலிருந்து கூட்டு குடிநீர் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்துதல், விழுப்புரம் – சென்னை நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டி டோல்கேட் அருகில் உள்ள விக்கிரவாண்டி பெரிய ஏரியின் பாசன நிலங்கள் 300 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யும் விவசாயிகளும் மற்றும் ஆவுடையார்பட்டு,

கயத்தூர், ரெட்டிக்குப்பம், குத்தாம்பூண்டி, வெட்டுக்காடு கிராமத்திலுள்ள விவசாயிகளும், விவசாய விளைபொருட்களை, டோல்கேட் அருகிலுள்ள வேளாண் விளைபொருள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு (கமிட்டிக்கு) கொண்டு வருவதற்கும், மேற்படி கிராம பொதுமக்கள் போக்குவரத்திற்கும் போதிய சாலை வசதி இல்லாத காரணத்தினால், பொதுமக்களின் நலன் கருதி, விக்கிரவாண்டி பெரிய ஏரிக்கரையை அகலப்படுத்தி, தார் சாலை அமைத்து, விவசாயிகளும் மற்றும் பொதுமக்கள் பயன்பெற்றிடவும், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அய்யங்கோயில்பட்டு ஊராட்சியின் குக்கிராமமான முத்தாம்பாளையம் ஏரியில் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக நடைபாதை அமைத்தல் மற்றும் படகு சவாரி குழுமம் சுற்றுலா துறை மூலம் அமைத்தல்,

வேளாண்மைத்துறையின் மூலமாக சிறுதானிய பயிரான ராகியிணை விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்து நேரடிக்கொள்முதல் நிலையம் மூலமாக சிறுதானியத்தை கொள்முதல் செய்து முதல்வரின் காலை உணவுத்திட்டத்திற்கு பயன்படுத்தலாம் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊராட்சி செயலாளர் நடராஜன், உறுப்பினர்கள் விஸ்வநாதன், முருகன், சிவக்குமார், நைனார்முகமது, பாலாஜி, தமிழ்செல்விகேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மணம்பூண்டி தென்பெண்ணை ஆற்றிலிருந்து முகையூர் ஊராட்சி ஒன்றிய கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Mhamboondi Tenpenna river ,Mukaiyur ,panchayat ,Collector ,Palani ,Villupuram ,Villupuram district ,Mahambundi Tenpenna river ,Mukaiyur panchayat ,
× RELATED வேதாரண்யம் தாலுகா தென்னடார்...