×

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்க பயணம்.. இந்தியா – அமெரிக்கா இடையே 2 பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து..!!

வாஷிங்டன்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணத்தில் இந்தியா அமெரிக்கா இடையே 2 பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 4நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டனுக்கு சென்ற அவர், அங்குள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது, உலகில் அமைதி, வளம் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யக்கூடிய வலிமையான சக்திகளாக இந்தியாவும், அமெரிக்காவும் திகழ்கின்றன. இந்தியாயும், அமெரிக்காவும் இணைந்து உலகத்தின் அமைதி, செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய முடியும் என கூறினார்.

இதையடுத்து இரு நாட்டு ராணுவ உறவை மேலும் விரிவாக்கும் வகையில் இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாயின. எஸ்.ஓ.எஸ்.ஏ., எனப்படும் ராணுவ வினியோக உறுதி ஏற்பாடுகள் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தவிர, இரு நாடுகளுக்கும் இடையே தொடர்பு அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது. அமெரிக்க அரசின் சார்பில் அந்த நாட்டின் ராணுவ தொழில் கொள்கைப் பிரிவின் முதன்மை துணை உதவிச்செயலர் டாக்டர் விக் ரம்தாஸ், இந்தியா சார்பில் ராணுவத்தின் கொள்முதல் பிரிவின் டைரக்டர் ஜெனரலும், கூடுதல் செயலருமான சமீர் குமார் சின்ஹா கையெழுத்திட்டனர்.

வினியோக தொடர்
இந்த ஒப்பந்தத்தின்படி, தங்களுடைய நாட்டின் ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களுக்கான பொருட்கள் மற்றும் சேவைகளை, மற்ற நாட்டின் தொழில் துறைகளிடம் இருந்து இரு நாடுகளும் பரஸ்பரம் பெற்றுக் கொள்ள முடியும். அதாவது, வினியோக தொடரில் தடை இல்லாத வகையில், நேரடியாக தொழில் துறைகளிடம் இருந்து தங்களுக்கு தேவையான பொருட்களை இரு நாடுகளும் வாங்கிக் கொள்ள முடியும். இது நாட்டின் பாதுகாப்புக்கு வலு சேர்ப்பதுடன், ஒப்பந்தம் மூலம் இந்திய நிறுவனங்கள் பயனடையும். எஸ்ஓஎஸ்ஏ ஒப்பந்தத்தை அமெரிக்கா இதுவரை, இத்தாலி, ஜப்பான், கொரியா, சிங்கப்பூர் உட்பட 17 நாடுகளுடன் இந்த ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது, 18வது நாடாக இந்தியா இணைந்துள்ளது.

The post ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்க பயணம்.. இந்தியா – அமெரிக்கா இடையே 2 பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து..!! appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Rajnath Singh ,US ,India ,USA ,WASHINGTON ,EU ,MINISTER ,UNITED STATES ,Union Defence Minister ,
× RELATED ரூ.1.45 லட்சம் கோடி மதிப்பில் ராணுவத்...