அஜ்மீர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் 1992ம் ஆண்டில் பள்ளி மாணவிகளை ஒரு கும்பல் மிரட்டி பலாத்காரம் செய்த தகவல் அங்குள்ள நாளேட்டில் வெளியானது. இதுபற்றிய விசாரணையில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் இதுபோல் மிரட்டி பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் நபீஸ் சிஷ்டி, நசீம், சலீம் சிஷ்டி, இக்பால் பதி, சோஹைல் கனி, சையத் ஜமீர் ஹுசைன் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
பள்ளி மாணவிகளை மிரட்டி பலாத்காரம் செய்து, அவர்களை வீடியோ எடுத்து மேலும் மிரட்டி இருப்பது தெரியவந்தது. இதற்கு பலர் உதவியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிக்கிய 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து ராஜஸ்தானில் உள்ள போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. முன்னதாக, இதே வழக்கில் மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 4 பேர் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் 32 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
The post ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு 100 மாணவிகளை பலாத்காரம் செய்த 6 பேருக்கு ஆயுள்: 32 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு appeared first on Dinakaran.