பெங்களூரு: கர்நாடகாவில் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள் மீது தாக்குதல் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இப்படி தாக்குதலுக்கு உள்ளாகும் டாக்டர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதையேற்று கர்நாடக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரில் புதிய சட்ட மசோதா கொண்டுவந்து பேரவை மற்றும் மேலவையில் உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மாநில அரசு நிறைவேற்றிய புதிய சட்ட மசோதாவுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கினார். புதிய சட்டத்தின் படி டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு 3 முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனையும் ரூ.25 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
The post டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டு சிறை: கர்நாடகாவில் புதிய சட்டம் அமல் appeared first on Dinakaran.