திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் கே.வி.லோகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், இளைஞரணி சார்பில் மாநில இனைஞரணி செயலாளரும், இளைஞர் அணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சாற்றல் திறனை வளர்க்கும் வகையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில், ‘என் உயிரிலும் மேலான’ என்கிற தலைப்பில், தலைவர் கலைஞர் குறித்த பேச்சுப்போட்டி வரும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் பொன்னேரி, ஸ்ரீ வெங்கடேஷ்வரா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்தப் பேச்சுப்போட்டிக்கு மாவட்ட செயலாளரும், கும்மடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்குகிறார். நகர செயலாளர் ஜி.ரவிக்குமார், நகர மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஜெ.மோகன்பாபு, எம்.முரளிதரன், டி.சங்கர், செ.யுவராஜ், ரா.கதிரவன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.வி.லோகேஷ் வரவேற்கிறார். மாநில இளைஞரணி துணைச்செயலாளர்கள் ப.அப்துல்மாலிக், பிரபு கஜேந்திரன் ஆகியோர் சிறப்பு அளைப்பாளர்களாக கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசுகின்றனர்.
வழக்கறிஞர் அருள்மொழி, தமிழ் காமராசன், நாகை நாகராஜ் நடுவர்களாக இருந்து பேச்சுப் போட்டியை நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் இளைஞரணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். முடிவில் மா.தீபன் நன்றி கூறுகிறார். இந்த பேச்சு போட்டியில் கும்முடிப்பூண்டி மற்றும் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post ‘என் உயிரிலும் மேலான’ எனும் தலைப்பில் மாணவர்களுக்கிடையே பேச்சுப்போட்டி appeared first on Dinakaran.