- மான்டேரி ஓபன் டென்னிஸ்
- அலெக்ஸாண்ட்ரோவா
- லுலு சுன்
- மான்டெர்ரி
- ரஷ்யா
- நியூசிலாந்து
- Monterrey ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர்
- மெக்ஸிக்கோ
- எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா
- மான்டேரி ஓபன் டென்னிஸ்
- தின மலர்
மான்டெர்ரி: மெக்சிகோவில் நடைபெறும் மான்டெர்ரி ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரோவா – லூலு சுன் (நியூசிலாந்து) மோதுகின்றனர். காலிறுதியில் சீனாவின் யுயே யுவான் (25 வயது, 38வது ரேங்க்) உடன் மோதிய எகடெரினா அலெக்சாண்ட்ரோவா (29 வயது, 30வது ரேங்க்) 7-5, 7-6 (7-3) என்ற நேர் செட்களில் போராடி வென்றார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 1 மணி, 57 நிமிடங்கள் நடந்தது. மற்றொரு காலிறுதியில் ரஷ்யாவின் எரிகா ஆண்ட்ரீவா (20 வயது, 89வது ரேங்க்) சவாலை எதிர்கொண்ட லூலு சுன் (23 வயது, 57வது ரேங்க்) 6-4, 6-3 என நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார்.
இப்போட்டி 1 மணி, 22 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. அமெரிக்காவின் எம்மா நவர்ரோ (23 வயது, 13வது ரேங்க்) 2 மணி, 17 நிமிடங்கள் கடுமையாகப் போராடி, போலந்தின் மேக்தலினா ஃபிரெக்கை (26 வயது, 45வது ரேங்க்) 6-7 (3-7), 6-0, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். உக்ரைன் நட்சத்திரம் எலினா ஸ்விடோலினாவை (29 வயது, 28வது ரேங்க்) சந்தித்த செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா (19 வயது, 35வது ரேங்க்) 6-4, 6-4 என நேர் செட்களில் வென்று அதிர்ச்சி அளித்தார். இன்று நடைபெறும் அரையிறுதியில் சுன் – அலெக்சாண்ட்ரோவா, நோஸ்கோவா – எம்மா மோதுகின்றனர்.
The post மான்டெர்ரி ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்ட்ரோவா லூலு சுன் அரையிறுதியில் பலப்பரீட்சை appeared first on Dinakaran.