- சமாஜ்வாடி
- மாநில மருத்துவக் கல்லூரி
- கஜகஸ்தான்
- வேலூர்
- வேலூர் SP
- SP அலுவலகம்
- கஜகஸ்தான் மாநில மருத்துவ கல்ல
- தின மலர்
வேலூர், ஆக. 22: கஜகஸ்தான் நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரியில் மெடிக்கல் சீட் வாங்கி தருவதாக கூறி ₹4.80 லட்சம் ேமாசடி செய்த 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என எஸ்பி அலுவலகத்தில் வாலிபர் புகார் கொடுத்தார்.
வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பழைய காட்பாடி வி.ஜி.ராவ் நகர் பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் நேற்று புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் பள்ளி படிப்பு முடித்து கடந்த 2021ம் ஆண்டு கஜகஸ்தான் நாட்டில் உள்ள ஒரு அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தேன். பின்னர் கொரோனாவின்போது குடும்ப சூழல் காரணமாக கல்லூரி படிப்பை தொடர முடியாமல் பாதியில் நிறுத்திவிட்டேன். 2023ம் ஆண்டு மீண்டும் நான் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படிக்க முயற்சி செய்தேன். அப்போது ஐதராபாத்தை சேர்ந்த ஒருவரையும், திருப்பதியை சேர்ந்த ஒருவரையும் அணுகி, கஜகஸ்தான் நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் மீண்டும் சீட் வாங்கி தருமாறு கேட்டேன். இதற்கு அவர்கள் பல தவணைகளாக ₹4 லட்சத்து 88 ஆயிரம் மற்றும் எனது 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர். ஆனால் கல்லூரியிலும் சேர்த்து விடவில்லை. பணத்தையும் திருப்பித்தரவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது சான்றிதழ்களையும் பணத்தையும் மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post மெடிக்கல் சீட் வாங்கி தருவதாக ₹4.80 லட்சம் மோசடி எஸ்பி அலுவலகத்தில் வாலிபர் புகார் கஜகஸ்தான் நாட்டின் அரசு மருத்துவக்கல்லூரியில் appeared first on Dinakaran.