×

மாதச் செலவுக்கு ரூ.6 லட்சமா..? அப்படி வேண்டுமென்றால் நீங்களே சம்பாதியுங்கள்..கணவர் ஏன் தர வேண்டும்: கர்நாடக உயர்நீதிமன்றம் ஆவேசம்

கர்நாடகா: மாதச் செலவுக்கு ரூ.6 லட்சமா..? அப்படி வேண்டுமென்றால் நீங்களே சம்பாதியுங்கள். கணவர் ஏன் தர வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் ஆவேசம் தெரிவித்துள்ளது. மாதச் செலவிற்கு தனது கணவரிடம் இருந்து சுமார் ரூ.6.16 லட்சம் பெற்றுத் தருமாறு கர்நாடகாவை சேர்ந்த பெண் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் தரப்பில் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் அப்பெண் உணவு, உடை, காலணி உள்ளிட்டவைக்கு ரூ.60,000. மருத்துவ செலவுக்கு ரூ.5 லட்சம் என பட்டியலிட்டார்.

வாதத்தை தொடர்ந்து வழக்கை விசாரித்த பெண் நீதிபதி யாராவது ஒரு மாதத்திற்கு இவ்வளவு செலவு செய்வார்களா..? அப்படி செலவு செய்ய வேண்டுமென்றால் அவரையே சம்பாதிக்கச் சொல்லுங்கள். கணவர் ஏன் தர வேண்டும்”எனக் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கொந்தளித்தார். மேலும், இந்து திருமணச் சட்டத்தின் கீழ் அப்பெண் உணவு, உடை, காலணி உள்ளிட்டவைக்கு ரூ.60,000. மருத்துவ செலவுக்கு ரூ.5 லட்சம் என பட்டியலிட்டது இந்து திருமணச் சட்டத்தின் கீழ் வராது, உங்களுக்கு வேறு எந்த பொறுப்பும் இல்லையா, குழந்தைகளை பற்றி கூட நீங்கள் யோசிக்கவில்லையே’ எனவும் நீதிபதி கேள்வி எழுப்பி ஆதங்கம் தெரிவித்தார்.

The post மாதச் செலவுக்கு ரூ.6 லட்சமா..? அப்படி வேண்டுமென்றால் நீங்களே சம்பாதியுங்கள்..கணவர் ஏன் தர வேண்டும்: கர்நாடக உயர்நீதிமன்றம் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Karnataka High Court ,Karnataka ,Dinakaran ,
× RELATED சிறைக்குள் கூடுதல் வசதிகள் கேட்டு...