* தேவஸ்தான ஊழியர் உட்பட 4 பேர் கைது சென்னை டிராவல்ஸ் பெண் ஏஜெண்டுக்கு வலை
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஆந்திர சுற்றுலாத்துறைக்கு வழங்கும் டிக்கெட்டுகளை தேதி மாற்றி கலர் ஜெராக்ஸ் எடுத்து அதனை விற்று மோசடி செய்வதாக விஜிலென்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது, விசாரணையில் ஆந்திர சுற்றுலாத்துறைக்கு வழங்கும் டிக்கெட்டுகளை தேதி மற்றும் பெயர்களை மாற்றி ஜெராக்ஸ் எடுத்து மோசடி நடந்தது தெரியவந்தது.
தேவஸ்தான முன்னாள் ஊழியர் அமிர்த யாதவ், ஆந்திர சுற்றுலா துறை முன்னாள் ஊழியர் பெரியசாமி ஆகியோர் கடந்த மாதம் 10ம்தேதி 35 பக்தர்களுக்கு போலி தரிசன டிக்கெட் கொடுத்து வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் நுழைவுவாயில் வழியாக அழைத்துச்சென்று தேவஸ்தான டிக்கெட் சரிபார்க்கும் ஊழியர்களான நவீன், ருத்ரராஜ் ஆகியோர் உதவியுடன் சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்தது தெரிந்தது. இதற்காக ரூ.11 ஆயிரம் வீதம் 35 பக்தர்களிடம் பணம் மோசடி செய்தது தெரிந்தது. அவர்கள் 4 பேரை யும் போலீசார் கைது செய்தனர். மேலும் சென்னையை சேர்ந்த டிராவல்ஸ் ஏஜென்ட் பத்மா என்பவரை தேடிவருகின்றனர்.
The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் 35 பக்தர்களுக்கு போலி தரிசன டிக்கெட் கொடுத்து மோசடி appeared first on Dinakaran.