×

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அக்.1ம் தேதியும், ஜம்மு – காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக சட்டப் பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜம்மு காஷ்மீரில் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதை தொடர்ந்து முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கான மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் 27ம் தேதியாகும்.

28ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களைத் திரும்பப் பெற ஆகஸ்ட் 30ம் தேதி கடைசி நாளாகும். வாக்குப்பதிவு செப்டம்பர் 18ம் தேதி நடைபெறும். இரண்டாம் கட்டத்தில் 26 தொகுதிகளுக்கு செப்டம்பர் 25ம் தேதியும், மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு 40 தொகுதிகளுக்கு அக்டோபர் 1ம் தேதி நடைபெற உள்ளது. மூன்று கட்டங்களுக்குமான வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்படுகின்றன.

 

The post ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Jammu ,Kashmir ,Assembly ,Jammu and Kashmir ,Haryana ,
× RELATED ஜம்மு காஷ்மீரில் முதற்கட்டத்...