×
Saravana Stores

ஒடிசாவில் மின்னல் தாக்கி 9 பேர் பலி: கடந்த 5 ஆண்டில் 10,741 பேர் மரணம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ததால், மயூர்பஞ்ச், பாலசோர் மற்றும் பத்ரக் மாவட்டங்களில் தலா 2 பேரும், கியோஞ்சார், தேன்கனல் மற்றும் கஞ்சம் மாவட்டங்களில் தலா ஒருவரும் ேநற்று ஒரே நாளில் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். பர்கார் மாவட்டத்தில் உள்ள முனுபாலி கிராமத்துக்கு அருகே உள்ள வயல்வெளியில் மின்னல் தாக்கியதில் 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல்வர் மோகன் சரண் மாஜீ, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார். ஒடிசாவில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் மின்னல் தாக்கியதில் 10,741 பேர் பலியானதாகவும் காலநிலை கண்காணிப்பு அமைப்பு மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் மின்னல் தாக்குதல் காரணமாக ஏற்படும் இறப்புகள் (1,000 சதுர கி.மீ.க்கு இறப்பு) 1,000 சதுர கி.மீ.க்கு 69 இறப்புகள் என்ற அளவில் பாதிவாகி உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

The post ஒடிசாவில் மின்னல் தாக்கி 9 பேர் பலி: கடந்த 5 ஆண்டில் 10,741 பேர் மரணம் appeared first on Dinakaran.

Tags : strikes ,Odisha ,Bhubaneswar ,Mayurpanch ,Balasor ,Badrak ,Kiyonhar ,Thenkanal ,
× RELATED ஆன்லைனில் ரூ.6.28 கோடி மோசடி மேலும் 5 பேரை கைது செய்தது ஒடிசா போலீஸ்