×

தேசிய பசுமை படை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விதைப்பந்து தயாரிப்பு பயிற்சி

 

கரூர், ஆக. 18: தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பில் மாநிலம் முழுவதும் மரக்கன்று நட்டு மாணவ, மாணவியரிடம் மரம் வளர்ப்பதின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது.இதன் அடிப்படையில் கரூர் மாவட்டம் தேசிய பசுமை படை சார்பில் தாந்தோணி ஒன்றியம் குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விதைப்பந்து தயார் செய்யும் விழிப்புணர்வு தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி தலைமையில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வகையான விதை பந்துகளை எவ்வாறு தயாரிப்பது என்ற குறித்த பயிற்சி நேரடியாக அளிக்கப்பட்டது.நிகழ்வில் பள்ளி தலை மை ஆசிரியர்சு.தனலட்சுமி, பள்ளிக்கல்வி குழு மேலா ண்மை கருத்தாளர் முருகேசன் கலந்து கொண்டு விதைப்பந்தின் பயன்கள் என்ன என்பது குறித்து பேசினார். பள்ளியின் ஆசிரியைகள் சாந்தி, மல்லிகா, மோனிகா சகாய ரோஸ்லின், தேவி ,சகிலா தேவி அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

The post தேசிய பசுமை படை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விதைப்பந்து தயாரிப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : National Green Force ,Karur ,Government of Tamil Nadu ,Department of Environment and Climate Change ,
× RELATED கரூர் – திருச்சி சாலையில் விபத்து...