×

அணைப்பளையம் பனை மரத்தில் கதண்டு அப்புறப்படுத்த கோரி கோரிக்கை

 

கரூர், செப்.14: கரூர் மாவட்டம், தாராபுரம் சாலை அணைப்பாளையம் கிராமம் புதூரில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பள்ளபாளையம் ராஜ வாய்க்கால் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் தினசரி அன்றாட பணிகளுக்கு செல்வது வழக்கம். இந்த வாய்க்கால் நடைபாதை அருகில் உள்ள பனைமரத்தில் கதண்டு வண்டு கூடு கட்டி உள்ளது.

இந்த வழியாக செல்லும் பொதுமக்களை அடிக்கடி தாக்கி வருகிறது. அதில், கடந்த தினங்களுக்கு முன் விவசாய வேலைக்கு சென்ற நாகராஜ் என்பவரை கதம்ப வண்டுகள் கொட்டியது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதேபோல், அடிக்கடி கதம்ப வண்டுகள் எனப்படும் விஷ வண்டுகள் பொதுமக்களைத் தாக்கிவருகிறது. எனவே, அவற்றை கூண்டோடு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அணைப்பளையம் பனை மரத்தில் கதண்டு அப்புறப்படுத்த கோரி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Dampalayam ,Karur ,Pallapalayam ,Public Works Department ,Raja Vaikal ,Dampalayam Village Puthur, Tarapuram Road, Karur District ,
× RELATED கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி