×

தாந்தோணிமலை ஒன்றிய அலுவலகத்தில் விநாயகர் கோயில் இடித்து அகற்றம்

 

கரூர், செப். 14: தாந்தோணிமலை ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் விநாயகர் கோயில் எனக் கூறப்பட்ட கட்டிடம், பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக இடிக்கப்பட்டது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் தாந்தோணி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் நுழைவு வாயில் வலது புறம் பகுதியில் சிறிய அளவிலான கட்டிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கட்டப்பட்டது.

இந்த கட்டிடம் விநாயகர் கோயிலுக்கானது என கூறப்பட்ட நிலையில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக அந்த கட்டிடம், இரவோடு, இரவாக அந்த பகுதியில் இருந்து இடித்து அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் உயர் கல்வியில் சேரும் பொழுது அவர்களுக்கு தமிழ்நாடு அரசால் மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

The post தாந்தோணிமலை ஒன்றிய அலுவலகத்தில் விநாயகர் கோயில் இடித்து அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Ganesha Temple ,Thanthonimalai Union Office ,Karur ,Ganesha ,Thanthonimalai Union ,Dandoni Union ,Dandonimalai ,Karur Corporation ,
× RELATED திருத்தணி விநாயகர் கோயிலில் உண்டியலை...