×

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை குறைந்த நாட்களில் அதிக அறுவை சிகிச்சை செய்து சாதனை

சென்னை: கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை குறைந்த நாட்களில் அதிக அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை 6 மாதங்களில் 1,000 பேருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 6 மாதங்களில் 1,000 பேருக்கு ரத்தநாள அடைப்பை சரி செய்யும் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் இருதயவியல் துறை தொடங்கி ஆறே மாதங்களில் ஆஞ்சியோ செய்து சாதனை.

தமிழ்நாட்டிலேயே அதிநவீன வசதிகள் கொண்ட துறையாக கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை இருதயவியல் துறை உள்ளது. இருதயவியல் துறையில் 6 மாதத்தில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.1,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆஞ்சியோ சிகிச்சை, ஆஞ்சியோபிளாஸ்டி, பேஸ்மேக்கர் கருவி பொருத்தி சாதனை படைத்துள்ளது.

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை இருதயவியல் துறையில் மட்டும் இதுவரை ரூ.40 கோடி சிகிச்சை இலவசமாக தரப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் -ரூ.40 கோடி சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை வழங்கி வரும் தமிழ்நாடு அரசுக்கும், சுகாதாரத்துறைக்கும் பயனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

The post கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை குறைந்த நாட்களில் அதிக அறுவை சிகிச்சை செய்து சாதனை appeared first on Dinakaran.

Tags : Artist century hospital ,Chennai ,Kindi, Chennai ,Centennial Hospital ,
× RELATED கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு...